திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்: தாய், தந்தையை கொன்றுவிட்டு 2 நாள் சடலத்துடன் வாழ்ந்தவர் கைது
தஞ்சாவூர்: திருமணம் செய்து வைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில், தாய் - தந்தையை கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்கள் சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
![]()
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்,80,. இவரது மனைவி லட்சுமி,73,. இவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் ரவிச்சந்திரன் மின்சாரத்துறையில் வேலை பார்க்கும் போது விபத்தில் உயர்ந்துள்ளார். மேலும் மகள் கீதாவுக்கும் திருமணம் ஆகி இறந்துவிட்டார்.
மேலும் இளைய மகன் ராஜேந்திரன்,45, மட்டுமே தில்லையம்பூரில் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திருமணம் ஆகாத மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. மேலும் அடிக்கடி தாய் - தந்தையுடன் ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தாய் தந்தையை வீட்டிலிருந்த அரிவாளால் எடுத்து தலை கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார். இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலத்துடன் இரண்டு நாட்கள் சாப்பிட்டு சர்வ சாதாரணமாக இருந்துள்ளார்.
![]()
மேலும் கொலை நடந்த இந்த இரண்டு நாட்களும் காலை எழுந்து, வெளியே சென்று குளித்து விட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (நவ.,28) வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் பார்த்தபோது. இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தாய்- தந்தையை கொலை செய்த மகன் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் தடைய அறிவியல் துறையினரும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வாசகர் கருத்து (17)
பாவம், கல்யாணம் பற்றி பள்ளிக்கூடம் சரியாக பாடம் நடத்தாததால்...
இப்பொழுது மதத்தை பற்றி யாருமே பேச வில்லை ......இதை வேறு மதத்தவர் செய்தால் வேறு வாயில் பேசுவார்களோ
இது நிச்சயம் சொத்து விஷயமாக இருக்கும்.
எட்டு கழுதை வயசாகியும் எல்லாத்தையும் செய்யணும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மன நோய் அறியாமையால் நடந்த விபத்து.