காலம் தாழ்த்தாமல் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்
தமிழ்நாடு பிராமணர் சங்க, 13வது மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீராமன் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். மாநில தலைவர் கணேசன் தலைமை வகித்து சங்க கொடியை ஏற்றினார்.
மாநில பொது செயலர் ராமநாதன், 2021 -22க்கான ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் ஜெயராமன், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்.
மாநில தலைவர் கணேசன் பேசுகையில், ''சங்க தேர்தலில் சந்தித்த சிக்கலான சட்டங்களை திருத்தி எதிர்காலத்தில் குழப்பமின்றி அமைப்பு தேர்தல் நடத்த, மாநில துணை பொதுச்
செயலர் பார்த்தசாரதி தலைமையில் குழு அமைத்து, 6 மாதத்தில் அறிக்கை பெறப்படும்,'' என்றார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, மருத்துவர் நடராஜன், ஓட்டல் அதிபர் பாபு, ஆடிட்டர்கள் துரைசாமி, சந்தான
கிருஷ்ணன், ரங்கநாதன் கவுரவிக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட சங்க கிளைகள், மாவட்டங்கள், தனி நபரின் சங்கப்பணியை பாராட்டி, விருது வழங்கப்பட்டது.
மத்திய அரசின், முற்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில், 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்று, தமிழகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கி, நலிந்த பிராமண சமூக முன்னேற்றத்துக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், நீதிமன்ற ஆலோசனைப்படி தக்கார் நியமனத்தில் பிராமணர் சமூகத்தில் தகுதியானவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணராயபுரம், நவ. 28-
மாயனுார் காவிரி ஆற்றில் குளித்த, அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
தென்காசி மாவட்டம் இடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஜாமீன்கான், 21; கரூர் அரசு மருத்துவ கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர். நேற்று விடுமுறை என்பதால், நண்பர்களுடன் மாயனுார் காவிரி ஆற்றுக்கு குளிக்க, மதியம், 3:30 மணிக்கு வந்தார்.
கட்டளை வாய்க்கால் பிரியும் இடத்தில் குளித்தபோது, முகமது ஜாமீன்கான் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள், மாயனுார் போலீசாருக்கு
தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் தகவலின்படி சென்ற கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு, அவரது சடலத்தை மீட்டனர். உடற்கூறு பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து மாயனுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!