வாகன நிறுத்தமாக மாறிய ஸ்டேட் பாங்க் சாலை
மாநகரில் வாகன ஸ்டாண்டாக மாறிய சாலையால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ஈரோடு மாநகர் ஸ்டேட் பாங்க் சாலை, காந்திஜி சாலைக்கு மாற்று சாலையாக உள்ளது. ஆனால், இந்த சாலையை, கார் நிறுத்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் டூவீலர், ஆட்டோக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்படுகிறது.
காலை, 9:30 மணி துவங்கி இரவு, 9:00 மணி வரை வாகன நெரிசல் தொடர்கிறது. சாலையோரம் கார்களை நிறுத்தி விட்டு, கடைவீதிக்கு சென்று பல மணி நேரம் கழித்து வந்து காரை எடுத்து
செல்கின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் தான் வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. போலீஸ் ஸ்டேஷன் முன்புறத்திலும் கூட, குறிப்பாக ஆடம்பர கார்கள் நிறுத்தப்படுகின்றன.
ஒருவேளை போக்குவரத்து போலீசார் இதற்கு அனுமதி தந்துள்ளார்களோ? என சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்டேட் பாங்க் சாலை வாகன ஸ்டாண்டாக மாறியுள்ள நிலைக்கு, விரைவில் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!