சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. மாறுபட்ட கருத்துகள் உண்மைக்கு மாறாக பரப்பப்படுகின்றது.
100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் மானியங்களும் தொடர்ந்து பின்பற்றப்படும். ஆதாரை இணைக்கும்போது மானியங்கள் ரத்து செய்யப்படும் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.
ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரே ஆதாரை வைத்து 10 மின் இணைப்பிலும் இணைக்கலாம். மின் இணைப்பு எண் பெயர் மாற்றாதவர்கள், அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கான வசதிகள் சிறப்பு முகாமில் ஏற்படுத்தப்படும். 2.33 கோடி மின் நுகர்வோரில் 15 லட்சம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். பணம் கொடுத்து ஆதாரை இணைக்க வேண்டிய அவசியமில்லை.
டிச.,31ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. மக்கள் அவசரமாக ஆதாரை இணைக்க வேண்டியதில்லை. மின்வாரியம் தற்போது 1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இழப்புகளை சரிசெய்யவும், மேம்படுத்தவுமே ஆதார் இணைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (14)
நம்புங்க... மழை வராது
A person selling arrack cannot manage electricity. What action minister taken to reduce corruption.
நல்ல டுபாக்கூர் அரசு என்ன செய்வது எல்லாம் மக்களின் தலைவிதி இவர்களை தேர்ந்து எடுத்த மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இது போல் நடக்காது.
Aadhar card not available to most of the persons in other countries, who have invested in tamilnadu but left india and settled there. They do not have aadhar card as they became citizen of that country. What is the position now here as they cannot get aadhar card. Govt has to clarify
புளுகிறார் . இழப்பை எடு கட்ட ஆதார் இணைப்பு என்றால் இருக்கும் ஏதோ ஒரு சலுகையை மறுக்கப்போகிறார்கள் . அது இலவச நூறு அலகு மின்சரமாக இருக்க வாய்ப்பு அதிகம் . மின் வாரியத்துக்கு இழப்பு முந்தைய தி மு க ஆட்சியில் தான் தொடக்கம் . அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி அதை குறைந்த விலைக்கு தேர்தல் நேரத்தில் விற்று தான் மின் வாரியத்தை போண்டி ஆக்கினார்கள் . மின் சாரம் வாங்கியதில் வாங்கியிருப்பார்கள் என்பது சொல்ல தேவையில்லை .