பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருமாவளவன்
புன்செய்புளியம்பட்டி, நவ. 28-
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 60வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டியில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி திருமாவளவன் பேசினார்.

ஈரோடு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் பேசுகையில், ''புன்செய்புளியம்பட்டியில் பா.ஜ., பிரமுகர் கார் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்,'' என்று பேசினார்.
கருணாநிதி சிலைக்கு மரியாதை
டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில், திருமாவளவன் கட்சி கொடியேற்றி பேசினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது நிருபர்களிடம் பேசுகையில், ''ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையது அல்ல; அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்துக்கு எதிரானது. மதமாற்ற தடை சட்டம், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான சதி திட்டம். இதை மக்கள் முறியடிப்பார்கள்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!