Advertisement

 சேலம் மாவட்டத்தில் ரூ.10 கோடி ஏப்பம்: நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு வலை

சேலம், நவ. 28-
சேலம் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி, 10 கோடி ரூபாய்க்கு மேல் ஏப்பம் விட்ட, உரிமையாளர்களை போலீசார் தேடுகின்றனர். விரைவில் அவர்களது புகைப்படம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

தனியார் நிதி நிறுவனம் நடத்துவோர், அதிக வட்டி வழங்குவதாக அறிவித்து, மக்களிடம் முதலீடு பெறுகின்றனர். 2, 3 மாதங்கள் வரை வட்டி தொகையை வழங்கி, மக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்கி, அவர்கள் மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பெரும் தொகையை முதலீடாக பெறுகின்றனர். கோடிக்கணக்கில் பணத்தை தேற்றிய பின் மாயமாகிவிடுகின்றனர்.
தமிழகத்தில் இதுபோன்று, 9,000 கோடி ரூபாய் மோசடி செய்த, 10 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு பரிசு வழங்கப்படும் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், கடந்த ஓராண்டில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட, 6 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், 2வது அக்ரஹாரம், லலிதாம்பிகை ஜூவல்லர்ஸ், 10 லட்சம் ரூபாய்; புது பஸ் ஸ்டாண்ட் வைஷ்ணவி பில்டர்ஸ், 8 லட்சம்; ஜஸ்ட்வின் நிறுவனம், 3 கோடி; பேர்லண்ட்ஸ் அமுதசுரபி, 2 கோடி; பாலக்கோடு ஆதிகேசவன் நிதி நிறுவனம், 1 லட்சம்; பாலக்காடு கணபதி பைனான்ஸ், 57 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏப்பம் விட்டுள்ளனர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர், 10 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சேலத்தில், 10 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிய, 6 நிறுவனங்கள் மீது வழக்குப்
பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருப்பவர்களை தேடி வருகிறோம். விரைவில் அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்படும்' என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement