Advertisement

கச்சேகுடா - கொல்லம் வார ரயில் அறிவிப்பு

சேலம், நவ. 28-
சபரிமலை பக்தர்களின் வசதிக்கு, கச்சேகுடா - கொல்லம் வார சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கச்சேகுடா - கொல்லம் சிறப்பு கட்டண ரயில், டிச., 5, 12, 19, 26, ஜன., 2, 9 ஆகிய திங்கள் மாலை, 3:50க்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, கோவை வழியே மறுநாள் இரவு, 11:50க்கு கொல்லத்தை அடையும். மறுமார்க்கத்தில் டிச., 7, 14, 21, 28, ஜன., 4, 11 ஆகிய புதன் காலை, 2:30 மணிக்கு கிளம்பி, அடுத்த நாள் காலை, 10:00 மணிக்கு கச்சேகுடாவை அடையும். இதற்கான முன்பதிவு

தொடங்கப்பட்டுள்ளது.


நவீன பெட்டிகள்
சேலம் ரயில்வே கோட்டம் வழியே இயங்கும் ரயில்களில் பாதுகாப்பு அம்சம், சொகுசு வசதி கொண்ட, எல்.எச்.பி., எனும் நவீன பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி சேலம் வழியே இயங்கும் மைசூர் - துாத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலின் இருமார்க்கத்திலும், அதன் பெட்டிகள், நவ., 27(நேற்று) முதல், எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளும் மாற்றப்படுகின்றன. இந்த பெட்டிகள், பயணத்தின்போது அதிக அதிர்வலையை ஏற்படுத்தாது. 'பயோ - டாய்லெட்' வசதியுடன், படுக்கை வசதி பெட்டிகளில் கூடுதல்
படுக்கைகள் இருக்கும்.பிறந்தநாள் கொண்டாட்டம்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement