‛‛பார்முலா ஒன் ரேஸ் மின் கார்: உருவாக்கி சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை

ஆர்எப்ஆர்23 (RFR23) எனப்படும் மின்சார பந்தய வாகனத்தை சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி இன்று(நவ.,28) துவக்கி வைத்தார்.
மின்சார பந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள்:
* இது இந்தியாவின் முதல் மின்சார பந்தய வாகனம் ஆகும்.
* ஆர்எப்ஆர்23 (RFR23) எனப்படும் மின்சார பந்தய வாகனம் அதிக வேகம் செல்லும் திறன் கொண்டவை.
* மின்சார உந்துகளால் அதிக முடுக்கத்தை பெற்றுள்ளதால், நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய வாகனத்தை விட, மிக சிறப்பாக செயல்படும்.
* இதுவரை பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, இயக்கிய வாகனத்தை விட, இந்த ஆர்எப்ஆர்23 மின்சார வாகனம் முற்றிலும் மின்சாரத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
* இந்த வாகனம் சாலையில் செல்லும் போது, ஆரம்பக்கட்டமாக 4 விநாடியில் 100 கிலோ மீட்டரை தொடும் அளவு வேகத்திறன் கொண்டது.
* வடிவமைத்தலில் சிறப்பு பெயர் பெற்ற ரஸ்தார் மாணவர்கள் குழு, இந்த மின்சார பந்தய வாகனத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2023ல் நடக்க உள்ள பார்மூலா பாரத் போட்டியில் இந்த மின்சார பந்தய வாகனம் பங்கேற்க உள்ளது.
அதேபோல் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் ஜெர்மனியில் நடக்க உள்ள பார்மூலா மாணவர்கள் பந்தயத்தில் இந்த மின்சார பந்தய வாகனம் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (4)
சபாஷ் மாணவச் செல்வங்களே . மென்மேலும் பற்பல கண்டு பிடிப்புகளின்வழி உலகப் பெருமை பெறுக. நெஞ்சுநிறை நல்வாழ்த்துகள்.
எல்லா பாகங்களும் நம் உள்னாட்டு தயாரிப்பானல் மிகவும் நன்று, வாழ்த்துக்கள்.
ஐஐடி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் சாதனை புரியவேண்டும்.
சென்னை ஐ ஐ டி காமகோடி இருப்பதால் பெருமை அடைகிறது . மத்தபடி ஸ்டுடியோஸ் இன்ஸ்டிடியூட் எல்லாம் இல்லை