ஈழத் தமிழர் விவகாரத்தில் பா.ஜ., -- காங்., ஒரே நிலைப்பாடு திருமாவளவன் பேச்சு
மேலுார் : ''ஈழத் தமிழர் விவகாரத்தில் பா.ஜ., - காங்., ஒரே கொள்கையுடன் செயல்படுகிறது'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
மதுரை மாவட்டம் மேலுாரில் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது:
விடுதலை புலிகள் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம். இந்திய அரசின் ஆதரவு இருந்தால் மட்டுமே தன்னுடைய போராட்டம் வெற்றி பெறும் என்பதை தெரிந்திருந்தவர் பிரபாகரன். அப்படியிருக்கும் போது எப்படி ராஜிவ்வை கொல்ல ஆள் ஏவிவிட்டிருப்பார்.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் ராஜிவ் கொலையில் சர்வதேச சதி உள்ளது.அதன்பிறகு தான் விடுதலை புலி இயக்கம் 22 நாடுகளின் ஒத்துழைப்போடு அழிக்கப்பட்டது. இவ்வாறு பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!