மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு
மேட்டூர் : மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று உயர்ந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கு ஏற்ப, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்தும், சரிந்தும் வருகிறது. மொத்தம் 120 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் கடந்த 25ல், 119.89 அடியானது. நேற்று காலை, 8:00 மணிக்கு அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 11 ஆயிரத்து, 51 கன அடியாக இருந்தது. மாலையில், 12 ஆயிரத்து, 347 கன அடியாக அதிகரித்தது.
அணை நீர்மட்டம், 119.32 அடி, நீர் இருப்பு, 92.39 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 15 ஆயிரம் கன அடி நீர்; கிழக்கு, மேற்கு கால்வாய் வழியே, 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!