கார் குண்டு பயங்கரவாதி நண்பர் வீட்டில் சோதனை
கோவை : கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஜமேஷா முபின் நண்பர் வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் அக்.,23ல் கார் குண்டு வெடித்தது. இதில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், 29, பலியானார். முதல் கட்ட விசாரணையில், அவருடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை என்.ஐ.ஏ., தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், ஜமேஷா முபினின் நட்பு வட்டம் பற்றி விசாரித்த உக்கடம் போலீசார், அவருக்கும், பொன்விழா நகர் கே.ஜி.லேஅவுட்டில் வசிக்கும் ஜவுளிக்கடை ஊழியர் முகமது ஹசன், 29, என்பவருக்கும் நெருங்கிய நட்பு இருப்பதை கண்டறிந்தனர். நேற்று அவரது வீட்டில் உக்கடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். முபின் உடனான நட்பு பற்றியும் அவரிடமும், குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
குனியமுத்துாரில் அடிக்கடி மசூதிக்கு சென்று வந்தபோது இருவர், முபினுக்கு நண்பர்களாகியுள்ளனர். அவர்களையும் விசாரிக்க உக்கடம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!