அப்பதிவில், மொத்தமாக அனுப்பப்படும் பென்சில்களை பிரித்து, தனித்தனியாக பேக்கிங் செய்து அனுப்ப மாதம், ரூ.30 ஆயிரம் சம்பளம், முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் எனவும், புகைப்படங்களுடன் விளம்பரம் அமர்க்களப்படுகிறது.
'அட...பென்சில் அடுக்கும் வேலைதானே...அதுக்கு இவ்வளவு சம்பளமா' என நினைத்து, இப்பதிவிற்கு பலர் ஆர்வம் தெரிவித்து, பலர் கருத்து பதிவிடுவதை காணமுடிகிறது.
வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளும் நபர்களிடம், 'பென்சில் பேக்கிங் செய்வதற்கான பொருட்கள் அனுப்பும் போது முன்பணம், 10 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும். மாதம் பென்சில் பேக் செய்தால், 30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும், விருப்பமான நேரத்தில் பணி செய்து கொள்ளலாம்' என மூளை சலவை செய்கின்றனர்.
அப்புறம்தான் வேலையை காட்டுகின்றனர். செயல்பாட்டு கட்டணமாக, ரூ.600 முதலில் செலுத்த வேண்டும் என்று மெல்ல அவிழ்த்து விட்டு அத்தொகையை பெற்றுக்கொள்கின்றனர். அத்தோடு சரி; அந்த எண்ணை 'பிளாக்' செய்து விடுகின்றனர்.
பல நுாறு பேரிடம் அறுநுாறு!
தொகை சிறிது என்பதால், பலர் நொந்து கொண்டு கடந்து விடுகின்றனர். ஆனால் பல நுாறு பேரிடம் ரூ.600 எனும்போது, இது பெரிய மோசடி. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான, இல்லத்தரசி மஞ்சுமாலினி கூறுகையில், ''குழந்தைகள் இருப்பதால், முழுநேர வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால், பென்சில் பேக்கிங் விளம்பரத்தை, முகநுாலில் பார்த்து வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டேன். பணி சார்ந்த விபரங்களை கூறிவிட்டு, 'செயல்பாட்டு கட்டணமாக, ரூ.650 செலுத்த வேண்டும்; அந்த பணத்தில் 600 ரூபாய், முதல் சம்பளத்துடன் திருப்பி அளிக்கப்படும்' என தெரிவித்தனர்.
அத்துடன் ஆதார், பான் கார்டு ஜெராக்ஸ் கேட்டனர். தொகை குறைவு, வேலை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் கொடுத்து விட்டேன். அதன் பிறகு, என் நம்பரை 'பிளாக்' செய்து விட்டனர். தொகை குறைவு என்பதால் யாரிடமும் கூறவில்லை. ஆதார், பான் கார்டு நகல் வைத்து, என்ன செய்வார்களோ என்ற அச்சம் எப்போதும் உள்ளது,'' என்றார்.
இது குறித்து, போலீசார் கூறுகையில், 'மக்களின் ஆசையை துாண்டி விட்டே பல மோசடிகள் நடக்கின்றன. பகுதி நேர வேலை என்று, பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் குற்றங்களும் நடக்கின்றன. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்றனர்.
வாசகர் கருத்து (5)
ஆசை பேராசை - எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் திருந்தவே மாட்டார்கள்... பேனாவில் இங்க் நிரப்பும் வேலை என்று அடுத்து வரும்....
முந்தைய கட்டுமரம் ஆட்சியில் தேக்கு வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு என்று வித விதமா கொள்ளை அடித்தாநுவோ... இப்போ கேடுகெட்ட விடியாத ஆட்சியில் இப்படி மக்களை ஏமாத்துறானுவி... திருட்டு திராவிடத் துக்கும் இவனுவோல்லுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் போல... ஆன்ன அதிமுக ஆட்சியில் இவணுவோ எல்லாம் வாள சுறுட்டிகிட்டு இருகானுவோலே அது ஏன்...
சோகம் . தமிழகத்தில் மட்டும் இப்படி யோசிக்கிறார்கள்
ரிசர்வ் வங்கியில், நோட்டு அச்சடிக்கும் பணியில் சேர முதலில் 10 லட்சம் லஞ்சமாக தரவேண்டும், பின்பு வேலைக்கு சேர்ந்த பிறகு மாதம் ஒரு நாள் மஞ்சப்பையில் 500ரூபாய் நோட்டுகளை வீட்டுக்கு நிரப்பிச்செல்லலாம்னு ஒரு மோசடி திட்டம் அறிவித்தால், அதற்க்கும் ஒரு பேராசை பிடித்து மூடர் கூட்டம் பணம் கொடுக்க தயாராக இருக்கும். எத்தனை ஈமுகோழி திட்டம், தேக்கு மர வளப்பு திட்டம், 1வருடத்தில் பணம் இரட்டிப்பு திட்டம் என, என வந்தாலும் மோசடியை ஒழிக்க முடியாது. மற்றவர்கள் சேரும் முன், நாம் சேர்ந்து பணத்தை அள்ளிவிடலாம் என்ற பேராசைக்காரகள் இருக்கும் வரை மோசடியை ஒழிக்க முடியாது.
ஷாரிக் திருடப் பட்ட ஆதாரைத்தான் பயன் படுத்தி உள்ளான்.