சொந்த தொகுதியிலேயே அமைச்சருக்கு சோதனை: கறுப்புக்கொடி காட்ட திட்டம்

மதுரை மத்திய தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் தியாகராஜன் பங்கேற்றார். மகபூப்பாளையம், அன்சாரி நகர் பகுதியில் பயனாளி ஒருவரின் வீட்டிற்கு சென்று செயற்கை கால் வழங்கும் திட்டம் இருந்தது.
ஆனால், அப்பகுதியில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் ஒன்றை மீட்டுத் தருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அதற்கு ஒரு தரப்பினர் அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருந்து கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.
இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், அப்பகுதியில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அமைச்சர் திரும்பி சென்றார்.
வாசகர் கருத்து (9)
எந்த தேதியிலன்னு சொல்லிட்டு செய்ங்க உடன் பருப்புகளே.... அப்புறம் அதுக்கும் தேதி சொள்ளலையெண்ணு சொல்லிட பொராரு நம்ப அமெரிக்காவின் ரெண்டு பேங்க திவாலாகிய பொருளாதார மேதை
பாவம் இவர். இருதலை கொள்ளி எறும்பு போல் தவிக்கிறார்.
அடக்கம் அமரருள் உய்க்கும் .... அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ....
தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் ஒன்றை மீட்டுத் தருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்ததாகவும்... நல்ல விசியம் தானே ? அந்த தனியார் யார் ? ஓசி பிரியாணி உடன்பிறப்புகளா ?
எல்லாம் மதுரை பாரம்பரிய, கலாச்சார படி வெட்டு குத்து 👊 அடி தடி என்று கோலாகலமாக நடக்க வேண்டும்.