ADVERTISEMENT
புதுச்சேரி, : மூலிகை தாவர வாரியம், தோட்டக்கலை துறை, மருந்து கட்டுபாட்டு துறை, கால்நடை துறை இணைந்து மூலிகை தாவரம் வளர்த்தல், சந்தைபடுத்துதலுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
சட்டசபையில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில், வரும் டிச., 14ம் தேதி, காரைக்கால் வேளாண் கல்லுாரியில் விவசாயிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மூலிகை தாவரம், தோட்டக்கலை, மருந்து கட்டுப்பாடு, கால்நடை துறைகள் சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!