Advertisement

மாஜி எம்.எல்.ஏ., கடத்தலில் முக்கிய குற்றவாளி சரண்

புன்செய்புளியம்பட்டி, நவ. 21-
பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 46; கடந்த ஆக.,24ம் தேதி ஆறு பேர் கும்பலால் கடத்தப்பட்டார். அந்த கும்பல் தன்னிடம், 1.50 கோடி ரூபாய் பறித்து சென்றதாக, புன்செய்புளியம்பட்டி போலீசில் புகாரளித்தார்.
தனிப்படை அமைத்த போலீசார், சத்தி, அரியப்பம்பாளையம், நேரு நகரை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி சரவணன் மற்றும் அடையாளம் தெரியாத ஆறு பேரை தேடி வந்தனர். ஆறு பேரை கைது செய்த நிலையில், சரவணன் சிக்காமல் இருந்தார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, கோவையில் சிகிக்சை பெற்று தலைமறைவானார். இந்நிலையில் ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில். சரவணன் நேற்று சரணடைந்தார். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, புன்செய்புளியம்பட்டி போலீசார் கைது செய்து, சத்தி கிளை சிறையில் அடைத்தனர். காசி தமிழ் சங்கமம்: 2வது குழு பயணம்
சென்னை, நவ. 21--
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடக்கும், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து நேற்று, 280 பேர் கொண்ட இரண்டாவது குழு, பெரம்பூர் ரயில் நிலையத்தில்
இருந்து, 'பாட்னா எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் மேற்கொண்டது. அக்குழுவை, பா.ஜ.,வினர் வழியனுப்பி வைத்தனர்.
பழங்காலத்தில் இருந்தே, உத்தர பிரதேசத்தில் உள்ள, காசி என்ற வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையே, கலை, கலாசாரம், ஆன்மிக ரீதியாக நெருக்கடி தொடர்பு உள்ளது.
இந்த உறவு குறித்து, இரு மாநில மக்கள் அறிந்து கொள்ளவும், இரு மாநில கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்களை பகிர்ந்து கொள்ளவும், மத்திய அரசு, 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை, பிரதமர் மோடி நேற்று முன்தினம், வாரணாசியில் துவக்கி வைத்தார். இதற்காக, தமிழகத்தில் இருந்து ஒரு குழுவினர், காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வில் பங்கேற்க, 280 பேர் கொண்ட தமிழக குழு, நேற்று மதியம், சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில்
இருந்து, 'பாட்னா எக்ஸ்பிரஸ்' ரயிலில் புறப்பட்டு சென்றது.
பா.ஜ., மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர், பிஸ்கட், குடிநீர் வழங்கி, அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
பின், கரு.நாகராஜன்
கூறியதாவது:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலமாக, தமிழர்களின் புகழை உலகம் அறியச் செய்வதில், பிரதமர் மோடி, முன்னோடியாக இருக்கிறார். அந்த வகையில், உலகம் முழுவதும் வாழும், 10 கோடி தமிழர்களின் நெஞ்சம் நிறைந்துள்ளது. தமிழர்களின் பெருமையை போற்றி வளர்ப்பது, 130 கோடி இந்தியர்களின் கடமை; தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், தொழில் மேம்பாடு ஆகியவற்றை, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி துவக்க விழாவில், பிரதமர் கூறியிருந்தார்.
அத்தகைய பெருமை வாய்ந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு, 2,800 பேர் தமிழகத்தில் இருந்து
செல்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
2வது ரயில் கோவையில் புறப்பாடு
கோவை ரயில் நிலையத்தில் இருந்து காசி தமிழ் சங்கமம் ரயில், நேற்று அதிகாலை 4:40 மணிக்கு புறப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்த, 83 பயணியரை கோவை பா.ஜ.,வினர், மலர் கொத்து, எலுமிச்சம் பழங்கள் கொடுத்தும், மாலைகளை அணிவித்தும் வரவேற்றனர். முதற்கட்ட பயணத்தில் மாணவர்கள் குழுக்களாக பங்கேற்ற நிலையில், நேற்று புறப்பட்ட ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட ரயில்வே மற்றும் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement