dinamalar telegram
Advertisement

காதலியுடனான போட்டோவை நண்பர்களிடம் காட்டிய காதலன் போக்சோவில் கைது.

ADVERTISEMENT
மயிலாடுதுறை: சீர்காழி அருகே காதலியுடன் எடுத்துக் கொ ண்ட போட்டோக்களை நண்பர்களிடம் காண் பித்த காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மேலையூர், மேலவெளி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் பிரகாஷ்.20. ஜேசிபி ஆபரேட்டர். இவர், 11ம் வகுப்பு மாணவியை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை பிரகாஷ் தனது நண்பர்களிடம் காட்டியுள்ளார். இதனை அறிந்து மனமுடைந்த அந்த மாணவி சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்பு சிறையில் அடைத்துள்ளனர்.



வாசகர் கருத்து (18)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    மிக வேதனையான நிகழ்வு இவனுக்கு மனநோய் மாதிரி இருக்கு

  • Nazeer - Cuddalore,இந்தியா

    அதாவது பெண்களின் அந்தரங்க விஷயங்கள் பாதுகாக்க வேண்டிய விஷயம் அதுவும் தான் காதலித்த பெண்ணை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பியவன் அவளை எப்படி மணைவியாக்க முடியும் அவள் இவனைப் பற்றி தெரிந்து கொண்டுதான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்... ஆனால் அவன் தண்டிக்கப்பட வேண்டிய நபர்

    • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

      பெற்றோர் அறியாமல் அவன் கூட சுத்துனப்ப அந்த மாணவிக்கு ஏன் இதெல்லாம் தெரியாம போச்சு ?

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    மாணவனை போக்கோ சட்டத்தில் அடைத்தது கோர்ட்டுக்கு போனால் கேஸ் நிக்குமா? பாலியல் தொல்லையோ பலாத்காரமோ நடக்கவிலை.

    • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

      கேஸ் நிக்குதோ இல்லையோ...அவன் புத்தி தெரிந்து விட்டது. அந்த பெண் தப்பித்து விட்டார் இவனிடம் இருந்து.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    நெருக்கமாக இருந்தது மனசுக்கு நெருடலாக இல்லை அதை படம் எடுத்ததுகூட நெருடலாகவே இல்லை.. ஆனால் நண்பர்களிடம் காட்டியது மட்டும் நெருடலாக இருக்கிறது என்றால் இந்த பெண் அந்த நண்பர்களில் யாருடனாவது நெருக்கமாக இருந்திருக்கவும் வாய்ப்பு....

    • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

      உங்க குடும்பத்தில் அப்படியா? எந்த மகளிரையும் சிறுமை செய்யாதீர்கள். கோர்ட் உள்ளது தவறு யார் பக்கம் என்று சொல்ல. உங்கள் கருத்து மகளிருக்கு எதிரானது.

  • சீனி - Bangalore,இந்தியா

    ஜேசிபி ஆபரேட்டர் சிறுத்தை குட்டியா ? இது தான் அவனுங்க கட்சி வளர்க்கும் டிசைன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement