dinamalar telegram
Advertisement

சிறுமி பலாத்காரம் இரு வாலிபர்கள் கைது

புலியூர் அருகே, 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக, கூறி, பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை, குளித்தலை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள வீரராக்கியம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். மணவாசி கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி மல்லீஸ்வரன், 25, அதே ஊரை சேர்ந்த லாரி டிரைவர் இளவரசன், 24, ஆகிய இருவரும், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலாத்காரம் செய்தனர்.

இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி, 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலை ‍தொடர்ந்து, சிகிச்சையில் உள்ள சிறுமி, குளித்தலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, வழக்குப்பதிந்து, மல்லீஸ்வரன், இளவரசன் ஆகிய இருவரையும் கைது செய்தார். மல்லீஸ்வரனுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement