dinamalar telegram
Advertisement

நெருங்கும் தீபாவளி பண்டிகை: கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ள கரூர், ஜவஹர் பஜாரில், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, இந்த ஆண்டு, வரும் 24ல் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி திருவிழாக்கள் முடிந்த நிலையில், பொது மக்கள் புத்தாடைகள், தங்க நகைகளை வாங்க தொடங்கியுள்ளனர். கரூரை பொறுத்தவரை ஜவஹர் பஜார், கோவை ரோட்டில் அதிகளவில் ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

வழக்கமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது, கரூர், ஜவஹர் பஜாரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீஸார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
ஆனால், தீபாவளிக்கு பண்டிக்கைக்கு குறைந்த நாள்களே உள்ள நிலையில், கரூர், ஜவஹர் பஜாரில் உள்ள புறக் காவல் நிலையத்தில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால், கரூர், பஸ் ஸ்டாண்ட், ஜவஹர் பஜார், கோவை ரோடு பகுதிகளில், ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை, திருடர்கள் பறித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கரூர், வெங்கமேடு மற்றும் பசுபதிபாளையம் போலீஸ் சரக பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், சேலம் பைபாஸ் ரோடு, பழைய சேலம் ரோடு (வெங்கமேடு) பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, தீபாவளி திருவிழா நேரத்தில், திருட்டு சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க, கரூர் ஜவஹர் பஜார் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில், கூடுதல் போலீஸாரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement