Advertisement

சம்பள பாக்கி வழங்க கோரி கூட்டுறவு சங்கம் முன் ஊழியர் தர்ணா

கரூர், வாங்கபாளையத்தில், சம்பள பாக்கியை வழங்க கோரி, ஊழியர் ஒருவர், கூட்டுறவு சங்க அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர், வாங்கபாளையத்தில் மகளிர் கூட்டுறவு மேம்பாட்டு சங்கம் இயங்கி வருகிறது. இங்கு, புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்த செந்தில் என்பவர், கட்டிங் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சம்பள பாக்கி கொடுக்கவில்லை என கூறி, சங்க அலுவலகம் முன், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:
இந்த கூட்டுறவு சங்கத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களின் சீருடை தையல் பணியில், கட்டிங் மாஸ்டராக, 2012 - 19ம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்தேன். பணியில் சேரும்போது, நிரந்தம் செய்வதாக கூறினர். ஆனால், எந்த காரணமும் சொல்லாமல் பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். எனக்கு தரவேண்டிய சம்பள பாக்கி, 4 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதனையும் கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். எனவே, சம்பள பாக்கியை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின், கூட்டுறவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து சென்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement