Advertisement

300 பேருக்கு கன்று பராமரிப்பு பெட்டகம்: கலெக்டர் தகவல்

''கரூர் மாவட்டத்தில், 300 பேருக்கு கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கப்படும்,'' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கால்நடைகள் பராமரிப்புத் துறை சார்பில் கன்றுகள் பராமரிப்பு பெட்டக செயல் விளக்க முகாம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு அரசு கால்நடைகள் பராமரிப்பு துறை சார்பில், கன்றுகள் பராமரிப்பு பெட்டகம், பயிற்சி வழங்கப்பட உள்ளது. பாரம்பரியமாக உள்ள நடைமுறைகளை தவிர்த்து, தற்போது வளர்ச்சி அடைந்துள்ள விஞ்ஞானத்திற்கு ஏற்றவாறு பசுவையும், கன்றையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும். கன்று பராமரிப்பு பெட்டகத்தில் தொப்புள் கொடி வெட்டுதல், உயிர்ச்சத்து மருந்து, தாது உப்புக்கலவை, தாது உப்புக்கட்டி, உப்புக் கரைசல், இளங்கன்றுகளுக்கான அடர்தீவனம், குடற்புழு நீக்க மருந்து, வயிற்றுப் போக்கு கட்டுப்படுத்தும் மருந்து போன்ற, 8 வகையான பொருட்கள், மாவட்டத்தில் 300 பெண் பயனாளிகளுக்கு, 9.45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கபடவுள்ளது.

இவ்வாறு பேசினார்.
அதைத் தொடர்ந்து முதல்கட்டமாக 30 பயனாளிகளுக்கு கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் சரவணகுமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் அருணாசலம், பிரதம திட்டம் செல்வகுமார், உதவி இயக்குனர் (நோய் புலனாய்வு) லில்லி அருள்குமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement