dinamalar telegram
Advertisement

நல்லூர் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: தாசில்தார் உறுதி

குளித்தலை அருகே, நல்லுாரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் ஆக்கிரமிப்பு செய்து விற்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, விவசாயிகளிடம் தாசில்தார் உறுதியளித்துள்ளார்.
குளித்தலையை அடுத்த, நல்லுாரில் பொதுப்பணித் துறையின், அரியாறு பாசன பிரிவு

கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் முறைகேடாக குளத்து நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள், தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர்.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் தாசில்தார் கலியமூர்த்தி தலைமையில் நல்லுார் குளம் விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், குளத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் பல்வேறு புகார்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறை அரியாறு பாசன பிரிவு உதவி பொறியாளர் மணிகண்டன், நல்லுார் வி.ஏ.ஓ.,விஜயா, நல்லுார் பஞ்., தலைவர் கலா குணசேகரன், துணைத் தலைவர் அருள்ராஜ் மற்றும்
விவசாயிகள் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement