dinamalar telegram
Advertisement

ரகசியமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய குறைதீர் கூட்டம்: மக்கள் ஏமாற்றம்

கரூரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய, மக்கள் குறைதீர் கூட்டம் ரகசியமாக நடத்தப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.

தற்போது, கொரோனா நெருக்கடி குறைந்துள்ள சூழலில், நேரடி கலந்துரையாடல் மூலம் மட்டுமே பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோருடன் புரிதல் மற்றும் அதிக நம்பிக்கையை உருவாக்க முடியும். எனவே, ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி, காலை 11:00 மணிக்கு அனைத்து அலுவலகங்களிலும் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் அரசு விடுமுறை என்பதால், நேற்று, கரூர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். இந்த கூட்டம் நடப்பது குறித்து பொதுமக்களுக்கு பெரிய அளவில் தெரியாததால், குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள‍ே வந்திருந்தனர். இருப்பினும் பெயரளவில் கூட்டம் நடத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியுடன் சென்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது:
சாயக்கழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கரூரும் ஒன்றாகும். இந்த குறைதீர் கூட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், தங்கள் குறைகளை தெரிவிக்க வருவதில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பெயரளவில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில், உள்ளே செல்லவே கெடுபிடி இருந்தது. அலுவலக வெளியில் நின்ற செக்யூரிட்டி விசாரித்து, பின் அனுமதி வழங்கப்பட்டது. சிலர் மட்டுமே வந்த நிலையில், தன் அறையிலேயே மனுக்களை பெற்று கொண்டு அனுப்பிவிட்டனர். இப்படி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தை கூட, ரகசியமாக நடத்துகின்றனர் என கூறியவாறு அதிருப்தியுடன் மக்கள் திரும்பி சென்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement