dinamalar telegram
Advertisement

வாகன ஓட்டிகளை தவிக்க விடும் மினி பஸ் டிரைவர்கள்

கரூரில், போக்குவரத்து விதிகளை பின்பற்றாத மினி பஸ் டிரைவர்களால் மற்ற வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
கரூரில் இருந்து தான்தோன்றிமலை, புலியூர், காந்தி கிராமம், வைரமடை, வாங்கல், ரயில்வே ஸ்டேஷன், நெரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்லும், மினி பஸ்கள் சுமார் அரை கிலோ மீட்டர் துாரமுள்ள ரோட்டை கடப்பதற்குள்ளாக, 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். மேலும், எதிரே வரும் மினி பஸ் டிரைவர்களிடம் பேசுவது போன்ற முறையற்ற செயல்களில், சில மினி பஸ் டிரைவர்கள் ஈடுபடுகின்றனர்.

இதனால், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை சாலை, திண்ணப்பா தியேட்டர் சாலை, திருச்சி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். குறிப்பாக, அவசர சிகிச்சை நோயாளிகளை அழைத்து செல்லும், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கூட வழிவிடாமல் சாலையை அடைத்துக் கொண்டு மினி பஸ்களை, டிரைவர்கள் ஆமை வேகத்தில் இயக்குகின்றனர்.
மேலும், கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில், செல்லும் மினி பஸ் டிரைவர்கள், சிக்கனல்களை மதிக்காமல், பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி, அடிக்கடி விபத்தையும் ஏற்படுத்துகின்றனர்.
எனவே, கரூர் நகரப் பகுதியில் இயக்கப்படும் மினி பஸ் டிரைவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, விபத்துகளை தவிர்க்கும் வகையில், கரூர் வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement