dinamalar telegram
Advertisement

ஆன்லைன் விளையாட்டால் கல்லூரி மாணவர் தற்கொலை

திருச்சி:மணப்பாறை அருகே, 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டில் பணத்தை இழந்த கல்லுாரி மாணவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நாளங்காடி பின்புறம், ரயிலில் அடிபட்டு, வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது, மலையாண்டி பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் சந்தோஷ், 23, என்பதும், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் இறுதி ஆண்டு படித்ததும் தெரிந்தது.

மேலும், ஆறு மாதமாக அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் வீட்டை விட்டுச் சென்ற அவர், அன்று மாலை ஆன்லைன் ரம்மியில் அதிக பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொள்வதாக மொபைல் போன் ஸ்டேட்டஸ் பதிவிட்டு உள்ளார்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், போன் செய்த போது, மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று காலை ரயில் தண்டவாளத்தில் சந்தோஷ் சடலமாக மீட்கப்பட்டார். கல்லுாரி மாணவர் ஒருவர், ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement