dinamalar telegram
Advertisement

ஆரணியில் பட்டுப்பூங்கா எப்போது? 22 ஏக்கர் நிலம் வழங்கியும் அரசு அலட்சியம்

ஆரணி:ஆரணியில் பட்டுப்பூங்கா அமைக்க, 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான, 22 ஏக்கர் நிலத்தை வழங்கியும், அரசு அலட்சியம் செய்து வருவதால், 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், தர்மாவரத்தை அடுத்து ஆரணி பட்டுப்புடவையை மக்கள் விரும்புகின்றனர்.இந்த தொழிலில், பட்டு நுால் முறுக்கேற்றுதல், சாயம் தொய்த்தல், வடிவமைத்தல், பட்டு சேலை நெய்தல், என பல்வேறு பணிகள் உள்ளன.இதில், ஆரணி, சேவூர், முனுகப்பட்டு, தேவிகாபுரம் என, 75க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை பெறுகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.ஆரணியில் பட்டு தொழிலை மேம்படுத்த பட்டு பூங்கா அமைக்க, பட்டுப்புடவை உற்பத்தியாளர்களுக்காக செயல்படும் பல சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து, 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 22 ஏக்கர் நிலம் வாங்கி தயார் செய்து, இங்கு பட்டு பூங்கா அமைக்க கோரி, அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இவை ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை அரசு பரிசீலனை செய்து கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்து, பட்டு பூங்காவை தொடங்கினால், ஆண்டுக்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுவர்.மேலும், 1,000 கோடி ரூபாய் அளவிற்கு பட்டு நெசவு வியாபாரமும் நடக்கும். இதன் மூலம் அரசுக்கு வருவாயும் பெருகும். ஆனால், அரசு அலட்சியமாக செயல்படுவது வேதனையாக உள்ளதாக அப்பகுதி பட்டு நெசவு தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement