dinamalar telegram
Advertisement

பழைய திண்டுக்கல் சாலையில் சரக்கு வாகனங்களால் இடையூறு

கரூர், பழைய திண்டுக்கல் சாலையில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து பழைய திண்டுக்கல் சாலை வழியாக ஜவஹர் பஜார் செல்லும் சாலை வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இருப்பினும், சாலை ஓரங்களில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக கால‍ை, மாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். அந்த சமயத்தில், வணிக நிறுவனங்களின் முன்னால் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பொருட்களை ஏற்றி, இறக்குகின்றனர்.
இதனால் நெரிசல் ஏற்பட்டு, சாலையில் நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், போலீசாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் திணறுகின்றனர்.
எனவே, நெரிசல் மிகுந்த நேரங்களில் சரக்கு வாகனங்கள், ஜவஹர் பஜார் பகுதிக்குள் வர தடை விதிக்க வேண்டும். மேலும், போக்குவரத்து போலீசாரும் முழு நேரம் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement