dinamalar telegram
Advertisement

20 ஆயிரம் ஆசிரியர்கள் 13 ஆண்டுகள் போராட்டம்

மதுரை: தமிழகத்தில் ஒரு நாள் இடைவெளியில் ஒரே பதவி, ஒரே கல்வித் தகுதியில் அரசு பள்ளிகளில் பணி நியமனமான இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.3170 சம்பள வித்தியாசத்தை சரிசெய்யக் கோரி 20 ஆயிரம் ஆசிரியர்கள் 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.


தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த தி.மு.க.,வும் கண்டுகொள்ளவில்லை என அதிருப்தியில் உள்ளனர். அரசு பள்ளிகளில் 2009 ஜூன் 1க்கு முன் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370 எனவும், ஜூன் 1க்கு பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5200 எனவும் அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ரூ.3170 சம்பள வித்தியாசத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது இருந்த கல்வித்துறை அதிகாரிகள் இப்பிரச்னை சரிசெய்யப்படும் என உறுதியளித்தனர்.


ஆனால் 13 ஆண்டுகளை கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க., அளித்த தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது. இதை நம்பி பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்கள் ஓட்டளித்தனர். ஆனாலும் 'விடியல்' கிடைக்கவில்லை.இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:இப்பிரச்னையில் மாநில அளவில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதித்துள்ளனர். ஒருவருக்கு ஆரம்பத்தில் ரூ. 3170 ஆக இருந்த அடிப்படை சம்பள முரண்பாடு தற்போது 12 ஊதிய உயர்வுகளால் ரூ.25 ஆயிரம் வரை அடிப்படை சம்பளத்தில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.


ஒரே வேலை, ஒரே கல்வித் தகுதி இருந்தும் சம்பளத்தில் இந்த அளவு பாதிப்பால் கடும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். அரசு விதிகளின்படி இது விதிமீறல். தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் எதிரொலியால் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் 311வது வாக்குறுதியாக சேர்த்திருந்தது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. விரைவில் மாநில அளவிலான போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.



வாசகர் கருத்து (1)

  • இந்திரன், - ,

    தான் வாங்கும் சம்பளத்தில் 5000 ரூபாய்க்கு வேறு ஒரு ஆசிரியையை நியமித்து பாடம் நடத்தும் அளவுக்கு வந்துவிட்ட இவர்கள் ஆசிரியர்களா? கடந்த இரண்டு ஆண்டுகள் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கி சாப்பிடும்போது கொஞ்சமாவது கூச்சம் இருந்ததா இவர்களுக்கு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement