பா.ஜ.,வை நெருங்கி வரும் வட மாநில கிறிஸ்துவர்கள் வானதி தகவல்
இந்த செய்தியை கேட்க

மிசோரம் மாநில பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, அம்மாநில தலைநகர் ஐஸ்வாலுக்கு சென்றிருந்தேன். கூட்டம் நடந்த பா.ஜ., தலைமை அலுவலகத்தில் இயேசு கிறிஸ்து படம் வைக்கப்பட்டு இருந்தது.
பைபிள் வசனங்கள் படிக்கப்பட்டு, கிறிஸ்துவ பிரார்த்தனையுடன் தான் கூட்டம் துவங்கியது. மிசோரமில் மட்டுமல்ல, நாகலாந்து, மணிப்பூர் என, வடகிழக்கு மாநிலங்களில், இதே போல கூட்டம் துவங்குவதை நேரில் பார்த்திருக்கிறேன்.
கிறிஸ்துவர்கள் பலர் பா.ஜ.,வை நோக்கி வருவதும், கட்சிப் பணிகளில் ஆர்வம் கட்டுவதும் பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால், பா.ஜ.,வை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு, இது ஆச்சரியமாகவே தெரியாது. ஏனெனில், இந்தியாவில் உண்மையான மதச்சார்பற்ற கட்சி பா.ஜ., மட்டுமே.
சிறுபான்மை மதத்தினரின், ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்வதற்காக, பெரும்பான்மையான ஹிந்து மக்களை இழிவுபடுத்துவதும், அவர்களுக்கு எதிராக செயல்படுவதும், அவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாததும் தான் 'மதச்சார்பின்மை' என்று நிறுவப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற என்றால், ஏதாவது ஒரு மதத்திற்கு எதிராக செயல்படுவது அல்ல. அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, அவர்களை உணர்வுகளை போற்றுவது தான் உண்மையான மதச்சார்பின்மை. அந்த அடிப்படையில் பா.ஜ., மட்டுமே, அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கிறது. இதை வட கிழக்கு மாநிலங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது.
பா.ஜ.,வைப் பற்றி மிசோரம் மாநிலத்தவர்களிடம், குறிப்பாக பா.ஜ.,வுக்கு வந்திருக்கும் கிறிஸ்துவர்களிடம் பேசினேன். எதிர்க்கட்சிகளின் பேச்சை நம்பி, பா.ஜ., பற்றி தவறாகவே நினைத்திருந்தோம். இப்போது, கட்சிக்குள் வந்ததும் உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. நரேந்திர மோடி பிரதமரான பின், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில், அவர் காட்டிய அக்கறையும், நாங்கள் பா.ஜ.,வை நோக்கி வர காரணம் என்று கிறிஸ்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பில், பிஷப் தலைமை விருந்தினராக பங்கேற்று பேசியுள்ளார். கிறிஸ்துவர்கள் ஓட்டளித்ததால் தான், தொடர்ந்து மூன்றாவது முறையாக கோவாவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பா.ஜ., மட்டுமே மதச்சார்பற்ற கட்சி என்பதற்கு, இவையெல்லாம் அடையாளங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (54)
,,,,,……..
இவ்வளவு சீக்கிரம் வட இந்திய கிறிஸ்துவர்களையும் முட்டாள்களாக்கி விட்டீர்களா? பரவாயில்லையே!
அந்த ஆளு எழுந்திரிச்சு ஓடியே போயிடுவாராம்.
அவர்கள் மானமில்லாதவர்கள்.
,,,,