dinamalar telegram
Advertisement

வடலூர் தர்ம சாலையில் வள்ளலார் அவதார விழா

ADVERTISEMENT
வடலுார்--வடலுாரில், வள்ளலாரின் 200வது அவதார நாள் விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.


கடலுார் மாவட்டம், வடலுார் அருகே உள்ள மருதுார் கிராமத்தில் 1823 அக்டோபர் 5ம் தேதி வள்ளலார் பிறந்தார். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' எனக் கூறிய வள்ளலார், சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவி அதன் கொள்கைகளை பரப்பி வந்தார்.வடலுாரில் உள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில், அவரின் 200வது அவதார தின விழா நேற்று காலை விமரிசையாக நடந்தது.


காலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் கொடி பாட்டுடன் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.காலை 9:00 மணிக்கு சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து பகல் 2:00 மணி வரை சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து (9)

  • nallavan - manigramam,பஹ்ரைன்

    அருட் பெருந் ஜோதி அருட் பெருந் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை .இன்று இருக்கும் அனைவருக்கும் வள்ளலார் தான் குரு .அவர் கொள்கைகளைத்தான் எல்லோரும் மொழி மாற்றி சொல்கிறார்கள் .பசிப் பிணி தீர்க்கிறார்கள் .

  • duruvasar - indraprastham,இந்தியா

    வள்ளலார் என்றாலே அந்த நெற்றி முழுவதும் பூசிய வெண்ணீர் தான் நினைவுக்கு வரும். அந்த அடையாளத்தையும் மாற்றி வல்லபாய் பாழும் நெற்றியுடன் காட்சிதரும் மோட்டாரை ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்சியில் வைத்திருந்தார்கள். அடையாளங்களை அழிப்பதில்தான் திராவிட கட்சிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவியல் செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ,,,,, 😀

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்

    எவனாவது ஒரு திராவிஷா அரசியல் வியாதி அல்லது அவனோட எடுபிடி, "வள்ளலாரை இந்து சாமியாரா காட்டுறாங்களே "ன்னு வேதனை படுவான், இந்த திருநீறை பார்த்தால்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement