dinamalar telegram
Advertisement

கால்வாயை அழித்து ரோடு அமைப்பு தண்ணீரின்றி தரிசாகும் நிலங்கள்

ADVERTISEMENT


மேலுார்-மேலவளவில் கொட்டாம்பட்டி ஒன்றிய அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இன்றி, தண்ணீர் வெளியேறும் கால்வாய்களை மறைத்து ரோடு அமைப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.இங்குள்ள அழகிரி குளத்தில் இருந்து பாசனத்திற்கு 3 பாசன மற்றும் 5 கால்வாய்கள் வழியாக தண்ணீர் வெளியேறுவதன் மூலம் ஏராளமான ஏக்கர் பயன்பெறும். தற்போது கொட்டாம்பட்டி ஒன்றிய அதிகாரிகள் கருப்புக்கோயிலில் இருந்து மேலவளவு வரை ரூ. 23 லட்சத்திற்கு 2 கி.மீ., தொலைவுக்கு மணல், ஜல்லிக்கற்களால் ரோடு அமைக்கின்றனர். இப்பணியின் போது கால்வாய்களை அழித்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், ''ரோடு அமைக்கும் முன் அதிகாரிகள் பார்வையிட்டு பாசன, கால்வாய்கள் உள்ள இடங்களில் தண்ணீர் வெளியேற துாம்பு அமைப்பது குறித்து ஆலோசித்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ரோடு அமைக்கின்றனர். அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கால்வாய் அழிப்பால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது'' என்றனர்.பி.டி.ஓ., ராமமூர்த்தி கூறுகையில், ''விவசாயிகள் மனு கொடுத்திருப்பதால் பணிகளை நிறுத்தி, துாம்புகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.



வாசகர் கருத்து (1)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    ''விவசாயிகள் மனு கொடுத்திருப்பதால் பணிகளை நிறுத்தி, துாம்புகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.- ஒரு வேலை விவசாயிகள் மனு கொடுக்காமல் இருந்திருந்தால்.. அதிகாரிகளுக்கே தெரிய வேண்டாமா சிறு பாலம் / துாம்புகள் அமைத்து சாலை போடணும் என்று. இப்போதுள்ள எந்த அதிகாரிகளுக்கும் பொதுநல அக்கறை இல்லை. மாசம் ஆனால் சம்பளம். பிறகு ஏன் அக்கறை கொள்வார்கள்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement