dinamalar telegram
Advertisement

இயந்திரம் மூலம் நெல் அறுவடை தீவிரம்

ADVERTISEMENT


வாடிப்பட்டி- -வாடிப்பட்டி தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் சாகுபடி செய்த நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இப்பகுதியில் தொடர் மழை மற்றும் கால்வாய் பாசனத்தால் கண்மாய்கள் நிரம்பியுள்ளன. வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுாரில் கால்வாய் பாசன வசதிபெறும் பகுதிகளில் விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்தனர். தற்போது விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது தனியாரிடம் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு ஏக்கர் வைக்கோல் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விலை போகிறது. பரவலாக அறுவடை பணிகள் நடப்பது, மழைக்கு வாய்ப்புள்ளதால் வைக்கோல் விலை குறையவும், அறுவடைப்பணி பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement