dinamalar telegram
Advertisement

புதிய வீடு இடிப்பு8 பேருக்கு காப்பு

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த, ஊனைமாஞ்சேரி, கொளப்பாக்கம் பகுதியில் வசிப்பவர் தங்கம், 32. இவர், இங்குள்ள காந்தி தெருவில், வீட்டு மனையில் புதிதாக வீடு கட்டினார்.
இதே பகுதியில் வசிக்கும் ஜானகி, மணி, ஜெகன், கற்பகம் ஆகியோர், இந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி வந்துள்ளனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் ஜெகன் தரப்பைச் சேர்ந்த, தி.மு.க., 196வது வட்ட துணை செயலர் வீரமூர்த்தி, 42, இளைஞரணி நிர்வாகி பிரகாஷ், 31, உட்பட எட்டு தி.மு.க., நிர்வாகிகள், ஜே.சி.பி., இயந்திரத்தால், தங்கம் கட்டிய வீட்டை இடித்தனர்.
இது குறித்து தங்கம் புகாரின்படி, ஓட்டேரி போலீசார், மேற்கண்ட எட்டு பேரையும் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள ஜானகி, மணி, ஜெகன், கற்பகம் ஆகிய நான்கு பேரையும் தேடுகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement