dinamalar telegram
Advertisement

 திருட்டை தடுக்க நடவடிக்கை 563 பேரிடம் விசாரணை

சென்னை:வீடு புகுந்து திருடுதல், செயின் மற்றும் மொபைல் போன் பறிப்பு வழக்குகளில் சிக்கிய, குற்றவாளிகள் 563 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னையில், திருட்டு, செயின் மற்றும் மொபைல் போன் பறிப்பு வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகள் 403 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைக்கவும், பழைய குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தவும், கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.'அதன்படி, தனிப்படை போலீசார் வெவ்வேறு குழுக்களாக சென்று 563 பேரிடம் விசாரணை நடத்தினர். இவர்களில், 10 பேர் திருந்தி வாழ்வதாக உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனர். தலைமறைவாக இருந்த, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement