ADVERTISEMENT
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம், சன்னிதி தெரு பகுதியில் பழங்கால கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவமனை இயங்கியது.நாளடைவில் கட்டடம் சேதம் அடைந்ததால், இதன் அருகே உள்ள இடத்தில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு, தற்போது செயல்படுகிறது.
பழைய கட்டட வளாகத்தில் குப்பை குவித்து, சிறுநீர் கழித்து, சுகாதார சீர்கேட்டுடன் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம், இக்கட்டடத்தை இடிக்க கருதி, அதன் உறுதித்தன்மை சான்றை, பொதுப்பணித் துறையிடம் கோரிஉள்ளது.
இந்நிலையில், சப் - கலெக்டர் சஜீவனா, தாசில்தார் பிரபாகரனுடன், இக்கட்டடத்தை ஆய்வு செய்தார்.இடத்தின் வகைபாடு, அதன் உரிமை நிலை உள்ளிட்ட விபரங்கள் குறித்த அறிக்கை அளிக்க, வருவாய்த் துறையினரிடம் அறிவுறுத்தினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!