dinamalar telegram
Advertisement

போலீசாரின் செயல்பாடு டி.ஜி.பி., அதிரடி ஆய்வு

ADVERTISEMENT
மதுராந்தகம்:மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு காவல் நிலையங்களில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று, ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், போலிசாரின் செயல்பாடுகள், காலி பணியிடங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் குறித்து, அந்தந்த காவல் நிலைய போலீசாரிடம் கேட்டறிந்தார்.ஆய்வின்போது, மதுராந்தகம் டி.எஸ்.பி., - பொறுப்பு - ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

நிருபர்களிடம் கூறியதாவது:குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படும். பழுதான கேமராக்கள் விரைவாக சீரமைக்கப் படும்.காவல் துறையில் 1,000 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் மற்றும் காலியாக உள்ள காவலர் பணியிடங்கள், மூன்று மாதங்களில் நிரப்பப்படும்.போதை பழக்கம், பாலியல் விழிப்புணர்வு, போக்குவரத்து நடைமுறைகளை கடைபிடிப்பது குறித்து பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, காவல் துறையினர் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement