dinamalar telegram
Advertisement

தம்பதி கழுத்தறுத்து கொலை ஆந்திராவில் பதுங்கியவர் கைது

குரோம்பேட்டை:சிட்லப்பாக்கத்தில், கழுத்தறுத்து தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆந்திராவில் பதுங்கியிருந்த குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.
குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயபேட்டை, பிள்ளையார் கோவில், முதல் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 59. அவரது மனைவி மஞ்சுளா, 49. இருவரும் பூ வியாபாரம் செய்து வந்தனர். அக்., 2ம் தேதி இரவு, இருவரும் கழுத்தறுக்கப்பட்டு, உடல் முழுதும் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

அப்பகுதி கண்காணிப்பு கேமராவில், ஆறுமுகத்தின் வீட்டுக்கு இரண்டு பேர் வந்து சென்றது பதிவாகி இருந்தது. விசாரணையில், ஆறுமுகத்தின் மகள் வசந்தியின் கள்ளக்காதலனான, அண்ணா நகர், திருமங்கலத்தை சேர்ந்த மோசஸ், 35, என்பவர், தன் சகோதரி மகனுடன் சேர்ந்து, கொலை செய்தது தெரியவந்தது.மோசஸின், மொபைல் போன் டவரை ஆய்வு செய்த போலீசார், ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்த மோசஸ் மற்றும் 15 வயது சிறுவனை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement