கொசு உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு பொதுமக்கள் கடும் அவதி
கரூர் மாநகராட்சியை சுற்றி, அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் உள்ளது. மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளது. வாய்க்கால்களில் தற்போது மழை தண்ணீருடன், சாக்கடை நீரும் செல்கிறது. இதனால், கரூர் மாநகராட்சி பகுதியில் பெரிய அளவிலான கொசுக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், இரவு நேரங்களில் கொசுக்கடியால், துாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்து, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, கரூர் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பட்ட கொசு உற்பத்தியால், மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கடந்த, இரண்டு நாட்களாக, காய்ச்சலுக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாவதை தடுக்க, முன்னெச்சரிக்கையாக, கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய், நீர்நிலைகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், கரூர் மாநகராட்சி நிர்வாகம், கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க வேண்டியது அவசியம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!