dinamalar telegram
Advertisement

மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அரசு அதிகாரிகள் அலட்சியம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தல், படு 'ஜோராக' நடக்கிறது. இதில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகனங்களை பிடிக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்ட பகுதி மற்றும் முழுநேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டுகளுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பொதுமக்கள் இலவச அரிசியை பெற்று கொள்வதில்லை.

இதனால், சில ஊழியர்களால் முறைகேடாக வெளிமார்க்கெட்டில் ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலும் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது.ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை, வருவாய் துறையில் பறக்கும்படை ஆகிய பிரிவுகள் உள்ளன. ஆனால், கடத்தப்படும் ரேஷன் அரிசி மூடைகளை மட்டுமே பல இடங்களில் கைப்பற்றும் பறக்கும் படை அதிகாரிகள், கடத்திய ஆட்கள் மற்றும் வாகனங்களை கண்டுகொள்வது இல்லை. அவ்வப்போது, கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு சிலரை பெயரளவுக்கு கைது செய்கின்றனர்.
இதனால், கரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து நாள்தோறும், குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இலவச அரிசி கடத்தும் சம்பங்கள் தொடர்ந்து நடக்கிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement