dinamalar telegram
Advertisement

தனியார் பஸ் மோதி 2 பேர் பலி

செய்யாறு அருகே, தனியார் நிறுவன பஸ் மோதியதில், ஆடு வியாபாரிகள் இருவர் பலியாயினர். இது தொடர்பாக பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த நெடுங்கல்லை சேர்ந்தவர் எல்லப்பபிள்ளை, 75; இவரது நண்பர் காஞ்சிபுரம் அடுத்த மானாமதியை சேர்ந்த கோவிந்தராஜ், 42; இருவரும் ஆடு வியாபாரிகள்.நேற்று காலை, 7:30 மணிக்கு காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் நெடுங்கல் கிராமம் பஸ் நிறுத்தத்தில், ஆடு வியாபாரம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, சென்னை சுங்குவார்சத்திரத்தில் இருந்து பொன்னுார் நோக்கி, தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற, தனியார் நிறுவன பஸ் அவர்கள் மீது மோதியது.


இதில், எல்லப்பபிள்ளை சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கோவிந்தராஜ், வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இது குறித்து, அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிந்து, பஸ் டிரைவரான, வந்தவாசி அடுத்த கீழ்புத்துாரை சேர்ந்த கன்னியப்பன், 42, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement