dinamalar telegram
Advertisement

கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

ADVERTISEMENT
மயிலாடுதுறை : சீர்காழி அருகே கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்ட துடன், விதைத்த விதைகளும் பாழ்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு ஊராட்சி, சின்னப் பெருந் தோட்டம் பகுதியில் 280 ஏக்கர் விளை நிலத் தில் ஆற்று நீர் பாசனத்தை கொண்டு விவசாயிகள் 2 போகம் நெல் சாகுபடி செய்து வந்தனர். கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியின் காரணமாக கடல் நீர் உப்புகாமல் தடுக்க அமைக்கப்பட்டு இருந்த எல்லை கரை முற்றிலுமாக சேதமடைந்தது.

இதனால் கடந்த 18 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக உப்பு நீர் உப்புகுந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, தடுப்பணை அமைக்க வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இவ்வாண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு காவிரி ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் காவிரி கடைமடை பகுதியான சின்ன பெருந்தோட்டம் பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை முன்கூட்டியே ஆரம்பித்தனர். விளை நிலத்தை பண்படுத்தி, நாற்றங்கால் தயார் செய்து, விதை விட்டனர். அந்த விதைகள் முளை விட்டுள்ள நிலையில் கடல் சீற்றத்தின் காரணமாக பெரிய வாய்க்கால் வழியே உப்பு நீர் 200 ஏக்கர் விளை நிலத்தில் சம்பா சாகுபடி செய்வதற்காக தயார் செய்யப்பட்ட நாற்றங்காலில் உட்புகுந்ததால் முளைவிட்ட நெல் விதைகள் உப்பு நீரில் கருகி பாழாகின.

இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், வடிகால் வசதி இல்லாததால் உப்பு நீர் வடிய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் இவ்வாண்டு சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இருந்து மீண்டு விவசாயத்தை தொடர்ந்திட ஏதுவாக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கடல் நீர் உட்புகாமல் தடுப்பதற்கு நிரந்தர தீர்வாக வடிகால் வசதி ஏற்படுத்தி தருவதுடன், அல்லிமேடு- நெய்தவாசல் இடையே நிரந்தர எல்லைக்கரை அமைத்து தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வாசகர் கருத்து (4)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இப்பொழுது என்ன நடக்கும். கடல் நீர் புகாமல் இருக்க திமுக அரசு பல கோடி ஒதுக்கி சுவர் எழுப்புகிறோம் என்று கூறி, நான்கு செங்கல்களை அடுக்கி வைத்து விட்டு, சுவர் கட்டியாச்சு என்றுகூறி, எல்லா பணத்தையும் ஆட்டை போட்டுவிடுவார்கள்.

    • த.இராஜகுமார் - Tenkasi,இந்தியா

      . ஏதவது ஆறுதல் சொல்லு

  • Velusamy Ramesh - Thanjavur,இந்தியா

    send the river water or canal water some amount to sea. then sea water will not enter....

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இப்ப சீர்காழி அடுத்து சென்னை ஆக கடல் ஊற நகரங்கள் நிச்சயம் நாசமாகும் இது உலக சுற்று சூழலில் அம்பைபின் கருது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement