ADVERTISEMENT
மதுரை : 'மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் 20 லட்சம் பேர் பயனடைகின்றனர்' என மத்திய ரசாயனத்துறை இணை அமைச்சர் பகவந்த் குபா தெரிவித்தார்.
மதுரையில் மத்திய அரசின் திட்ட பயனாளிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், தேசிய காற்றாலை நிறுவன டைரக்டர் ஜெனரல் பலராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.அமைச்சர் கூறியதாவது: மதுரையில் மத்திய அரசு திட்டங்களின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்தோம். இத்திட்டங்களின் மூலம் விவசாயிகள், தெருவோர வியாபாரிகள், ஏழைகள் உட்பட 20 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.

விவசாயிகளுக்கான திட்டத்தில் 89 ஆயிரம் பேர் ரூ.6 ஆயிரம் பெற்று சாகுபடிக்கு உதவுவதாக தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்புக்கு பின், பெண்கள் ரூ.10 ஆயிரம் கடன் பெற்று தெருவோரம் வியாபாரிகளாக, தினமும் ரூ.400 சம்பாதிக்கின்றனர்.கர்ப்பிணிகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 51 ஆயிரத்து 451 பேருக்கு ரூ.26 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் 4.44 லட்சம் பேருக்கு இணைப்பு உள்ளது. இதில் 1.96 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ளோருக்கு 2024 பிப்.,க்குள் வழங்கப்பட்டு விடும். தமிழகத்திற்கு தேவையான யூரியா உட்பட உரத்தேவைக்கேற்ப வழங்கி வருகிறோம். இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!