dinamalar telegram
Advertisement

சொல்லையும் செயலையும் கவனமாக கையாளுங்கள்: அமைச்சர்களுக்கு முதல்வர் வலியுறுத்தல்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சொல்லிலும் செயலிலும் அலட்சியமாக இல்லாமல் இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள் என திமுக அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக கட்சி நிர்வாகிகளுக்கும் அமைச்சர்களுக்கும் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நம்மிடம் வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். நம் தரப்பில் இருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது.

அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள்.
பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி - ஒட்டி, திரித்து மோசடி செய்து, வெற்றுப் புழுதியைக் கிளப்பி, அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க நினைக்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள்.

அவர்களின் கனவில் புழுதிமண் விழும். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பியது நமது ஆட்சி. அதனால் மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.வாசகர் கருத்து (51)

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  திருமா வைக்கோ பன்னிஅரசு நாம் தமிழர் கட்சி என்கிற நாம் கிறித்துவர் கட்சியில் இருக்கும் அஞ்சு-பைசா ஆட்கள் எல்லாமே இந்துக்களை ஒழித்துக்கட்டவேண்டும்-பாஜகவிற்கு போய்விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்-இந்துக்களின் அடையாளங்களை அழித்து அடுத்த தலைமுறைக்கு அதுபோகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்-திருவள்ளுவர், அவ்வையார், தமிழ் சித்தர்கள், மன்னர்களின் இந்து அடையாளங்களை அழித்து சோழமன்னர்களும் முகலாய மன்னர்கள் என்று சொல்ல பார்க்கிறார்கள். இந்த பன்றிக்கூட்டத்தைவிட சாமானிய இந்துக்கள் புத்திசாலிகள். இந்துமதம் என்பது அழகிய வாழ்வின் முறை. திமுக ரௌடிகளுக்கு சிறுத்தைகளுக்கெல்லாம் அது புரியாது. இந்துமதம் மக்களை சான்றோர்களாகத்தான் வைத்திருக்கும். இந்துமதம் பல கிளைகளை கொண்டுள்ளது. இந்துக்கள் எல்லோருமே புத்தரையும் வணங்குவார்கள். இந்துக்களுக்கு குறுகிய மனம் இருப்பதில்லை. வேளாங்கண்ணிக்கு செல்லும் இந்துக்கள் கோடிபேர் இருக்கிறார்கள். இந்துக்களுக்கு மதம் என்பதைவிட நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு உண்டு. என்ன தான் பன்றிகள் அவர்கள் மேல் சேற்றை வாரி இறைத்தாலும் இந்துக்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். வரும் தேர்தல்களில் இந்துக்களை அழித்துக்கொண்டிருக்கும் திமுகவையும் அதன் அடிவருடி கூட்டணி கட்சிகளையும் குப்பையில் தள்ளுவார்கள். திராவிட விஷச்செடிகளை ஒழித்தால் தான் இந்துமதத்தை சைவத்துக்குள் சுருக்கப்பார்க்கும் பொறுக்கிகளை ரௌடிகளை தண்டிக்கமுடியும். ஆளுநரை வாய்க்குவந்தபடி பேசும் ரௌடிகளை கடுமையான தண்டனைகளால் கண்டிக்கவேண்டும்.

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  ///////

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  ......

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் அழகாக சொன்னார். சட்டகல்லூரியில் நன்கு படித்தவர்கள் வக்கீல்களாகவும், ஜுட்ஜ்களாகவும் இருக்கிறார்கள். வெறுமனே சட்டக்கல்லூரிக்கு வந்துபோனவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த வக்கீலுக்கு ஆளுநரிடம் இந்த கேள்விகளை கேட்க என்ன தகுதி இருக்கிறது. வக்கீல்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது.

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  இந்த கருணா குடும்ப முன்னேற்றக்கழகம் என்ற திமுக, திக, கம்யூனிஸ்ட்ஸ், கான்-கிராஸ் மட்டும்தான் ஹிந்துக்களின் மீது வெறுப்புணர்ச்சியை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர். ஹிந்துக்களை பொறுத்தவரையில் ஹிந்துக்களையும், ஹிந்துக்களின் கடவுள்களை இழிவாய் பேசுகிறவனும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement