அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கட்சி தாவல்: தலைவர் பதவிக்கு ஆபத்து
கரூர் மாவட்டம், குளித்தலை பஞ்., யூனியனை சேர்ந்த அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் 3 பேர், தி.மு.க.,வில் சேர்ந்தனர். இதனால், அ.தி.மு.க., வசம் உள்ள தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் குளித்தலை பஞ்சாயத்து யூனியனில் அ.தி.மு.க., சார்பில் ஆறு பேரும், தி.மு.க., சார்பில் நான்கு பேரும் வெற்றி பெற்றனர்.
கடந்த, 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் குளித்தலை பஞ்சாயத்து யூனியனில் அ.தி.மு.க., சார்பில் ஆறு பேரும், தி.மு.க., சார்பில் நான்கு பேரும் வெற்றி பெற்றனர்.
இதனால், பஞ்சாயத்து யூனியன் தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த விஜயவிநாயகமும், துணைத் தலைவராக இளங்கோவனும் பதவியில் உள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய கவுன்சிலர்கள் சத்யா (7வது வார்டு), ராஜேஸ்வரி (9வது வார்டு), அறிவழகன் (10வது வார்டு) ஆகியோர் நேற்று, கரூரில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதனால், குளித்தலை பஞ்சாயத்து யூனியனில் தி.மு.க.,வின் பலம், ஏழாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க., வசம் உள்ள பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!