1,000 கிலோஅரிசி பறிமுதல்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், இலுப்பைக்கோரை பகுதியில், கோலமாவு குடோனில், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில், எஸ்.ஐ., விஜய் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். குடோனில் 20 சாக்கு பைகளில், 1,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்தனர்.அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கிராம பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி, பதுக்கிய சூலமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், 50 என்பவரை கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!