dinamalar telegram
Advertisement

முன்னாள் மாணவர்கள் 108 பேருக்கு 60ம் கல்யாணம்

ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1977 - 78ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், 108 பேருக்கு, ஒரே மேடையில், 60ம் கல்யாணம் நடந்தது.

கள்ளக்குறிச்சியில், 1977 - 78ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள், 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை சந்திப்பு கூட்டம் நடத்தி வருகின்றனர். மொத்தம், 150 பேர் கொண்ட இந்த குழுவில், 108 பேருக்கு தற்போது, 60 வயது முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று கள்ளக்குறிச்சி ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் அனைவரும் தம்பதியராக கூடினர். அங்கு, அனைவருக்கும், 60ம் கல்யாணம் ஒரே மேடையில் நடத்தப்பட்டது.

இதில், 60 வயது துவங்காத, 10க்கும் மேற்பட்டவர்களுக்கு சஷ்டியப்த பூர்த்தி யாகம் நடத்தி, மஞ்சள் கயிறு தாலி வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், இவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் ஆசுகவி ஆராவமுதன், சீனிவாசன், அய்யாக்கண்ணு, மணவாளன் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கினர்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் வேங்கடபதி, முன்னாள் நகர மன்ற தலைவர் ரங்கன் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து (8)

  • Sivak - Chennai,இந்தியா

    அற்புதமான யோசனை.... சூப்பர் பல வருட நட்புடன் இனிமையான இணைபிரியா துணையுடன் ....

  • sankar - Nellai,இந்தியா

    திமுக ஆட்களை அழைக்கவே கூடாது - அப்புறம் வந்துட்டு - அய்யர் எதுக்கு - திக ஆட்கள் எங்கே - மற்ற ஆட்கள் எங்கே என்று வெட்டி கூச்சல் போட்டு வேற்று விளம்பரம் தேடுவாங்கல்

  • duruvasar - indraprastham,இந்தியா

    தான் இருக்கும் வரை திமுகவை தலைமை செயலகம் பக்கம் வரவிடாமல் சாதனையை எம்ஜிஆர் ஆரம்பித்தது 1977 ஆம் ஆண்டுதான்‌. இந்த காலகட்டத்தில்தான் கட்டுமரம் பாட்டு பிரபலமானது. இந்த நிகழ்வு இவர்களுக்கு ஞாபகத்திற்க்கு வரும்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    கட்சிக்காரனுகளை எதுக்கு கூப்பிடனும் என்பது வயதான தம்பதிகளை அழைத்து ஆசிகள் வாங்கியிருக்கலாம்

  • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

    Best wishes

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement