dinamalar telegram
Advertisement

கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

ADVERTISEMENT
மயிலாடுதுறை: கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலாத் தலமாக வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் இன்று கிராம சபா கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளில் செய்து முடிக்கப்பட்ட மற்றும் செய்யப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆச்சாள்புரம் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் லலிதா கலந்து கொண்டார். வானதி ராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ. ராஜகுமார் பங்கேற்றார். இது போல மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தீவு கிராமமான கொடியம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி எம்பி. ராமலிங்கம், சீர்காழி சட்டசபை தொகுதி எம்எல்ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி ஆர்டிஓ. அர்ச்சனா, கொள்ளிடம் யூனியன் சேர்மன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

கூட்டத்தில் கொடியம் பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா மையம் ஆக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கொடியம்பாளையம் கிராம சாலையை நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement