dinamalar telegram
Advertisement

பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து கூட்டம்

கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நடந்தது.
டவுன் பஞ்சாயத்து தலைவர் சவுந்தரபிரியா தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் நடந்த விவாதம்:
கவுன்சிலர் சந்திரகுமார்: வார்டுகளில் உள்ள குறைகள் நோட்டில் எழுதப்படுகிறது. ஆனால் நிவர்த்தி செய்யப்படுவதில்லை. இதுகுறித்து பல முறை கோரிக்கை வைத்தும் பலனில்லை என்றார்.
திமுக கவுன்சிலர் தினேஷ்குமார்: குடிநீர் குழாய் இணைப்பை பார்வையிட குழு வந்தது. இதுகுறித்து கவுன்சிலர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை.
10வது வார்டு கவுன்சிலர் தேவி, அளித்த மனுவில், '10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரிந்து வரும் டவுன் பஞ்சாயத்து பணியாளர்களை இடமாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் கவுன்சிலர் தேவி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் வேலுச்சாமி, செயல் அலுவலர் குமரவேலன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement