Advertisement

வேரோடு சாலையில் முறிந்து விழுந்த மரம் : புளியம்பட்டியில் போக்குவரத்து பாதிப்பு

புன்செய்புளியம்பட்டியில், சாலையில் முறிந்து விழுந்த மரத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புன்செய்புளியம்பட்டியில் நேற்று அதிகாலை, 5:30 மணியளவில், பவானிசாகர் நெடுஞ்சாலையில் திரு.வி.க., கார்னர் பகுதியில் சாலையோரத்தில் இருந்த, 80 ஆண்டு பழமையான பூவரச மரம், திடீரென வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதித்தது. கிளைகள் விழுந்து கடைகளின் பெயர்ப்பலகை மற்றும் கூரைகள் சேதமடைந்தன. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.
நகராட்சி ஊழியர்கள் இயந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கிளைகளை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. மக்கள் நடமாட்டமில்லாத, அதிகாலை நேரத்தில் மரம் முறிந்து விழுந்ததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement