லீவை கொண்டாட புறப்பட்ட மக்கள்: களை கட்டிய ரயில்வே ஸ்டேஷன்
காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாட, சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்களால், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அலைமோதியது.
பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை நேற்று முதல் துவங்கியது. அதுபோல் கல்லுாரிகளுக்கும் ஆயுத பூஜை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை கொண்டாட சொந்த ஊர்களுக்கு கிளம்பிய மக்களால், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல பயணிகள் குவிந்தனர். கோவையில் இருந்து வந்த ரயில்களிலும் கூட்டம் காணப்பட்டது. ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வழக்கத்துக்கு மாறான கூட்டம் இருந்தது.

ஈரோடு-சேலம், ஈரோடு-கரூர், ஈரோடு-கேரளா மார்க்கமாக செல்லும் ரயில்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் இருந்தது. ஈரோட்டில் இருந்தும் அதிகளவில் பயணிகள், பல்வேறு ஊர்களுக்கு சென்றதால், ஸ்டேஷன் வளாகம் களை கட்டியது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!