dinamalar telegram
Advertisement

கழிவுநீரை வெளியேற்றிய ஆலைக்கு மின் இணைப்பு : கோபி அருகே மக்கள் முற்றுகையால் பரபரப்பு

கோபி அருகே, கழிவுநீரை வெளியேற்றிய ஆலைக்கு, மின் இணைப்பு வழங்குவதை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட மக்கள் ஆலையை முற்றுகையிட்டனர்.
கோபி அருகே கூகலுார் தண்ணீர்பந்தல் புதுாரில், தனியார் காகித ஆலை செயல்படுகிறது. ஆலை கழிவு நீர் ஆலைக்கு பின்னால் தேக்கி வைக்கப்பட்டு, இரவில் விவசாய நிலங்களில் திறந்து விடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் விவசாய கிணறுகள், விளை நிலங்கள் மாசடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருவதாக, அப்பகுதியினர் கொடுத்த புகாரின்படி, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆலை மின் இணைப்பை துண்டித்தனர். இந்நிலையில் ஆலைக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்படுவதாக, மக்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதற்கேற்ப அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், பிற அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனர். ஆலை முன் ஏராளமானோர் குவிந்தனர். அத்துடன் கூகலுார் மின் பொறியாளர் அலுவலகத்தில், ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது எனக்கூறி மனு வழங்கினர்.
இரு இடங்களுக்கும் வந்த கோபி போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மின் இணைப்பு வழங்குவது தொடர்பான பணி நிறுத்தப்பட்டது. அனைவரும் கலைந்து சென்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement